Chennai Ayurvedicayurvedic treatmentAlternative MedicineChennai Ayurveda


பித்தப்பை

in Digestive Disorders Tamil

பித்தப்பை உடலின் ஜீரண மண்டலத்தின் ஒரு அவயம். பேரிக்காய் போன்றது. 7-10 செ.மீ நீளமுள்ள, கல்லீரலின் வலதுபக்கத்தின் கீழே தொங்கும் பை.

  பித்தப்பை பித்த நீரை சேமித்து வைக்கிறது. பித்த நீரிலிருக்கும் தண்ணீர், 90 சதவிகிதம் பித்தப்பையிலிருந்து ரத்தத்தில் உறிஞ்சப்பட்டுவிடுகிறது. இதனால், மீந்த பித்த நீர், கெட்டியாக இருக்கும்.
பித்த நீர், கெட்டியான, காரத்தன்மை (alkaline) உடைய திரவம். இது கல்லீரலால் சுரக்கப்படுகிறது.
பித்த நீரில் இருப்பவை – பித்த நீர் உப்புகள் (Sodium glycocholate and Sodium taurocholate), நீர்மச்சத்துக்கள் (Electrolytes), வண்ணம் கொடுக்கும் பொருட்களான பைலீரூபின் மற்றும் பைலீவெடின் (bilirubin and bilivedin), கொலஸ்ட்ரால், இதர கொழுப்புகள்.
பித்த நீரின் உபயோகம்
•    பித்த நீர் உடலின் சில நச்சு கழிவுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது.
•    கொழுப்பு சத்துக்களை உடல் ஜீரணிக்க உதவுகிறது.
•    தவிர, கொழுப்பில் கரையும் விடமின்களை உடல் ஏற்றுக்கொள்ள உதவுகிறது.
•    டியோடினத்தில் முன்சிறுகுடல் ஏற்படும் அலை போன்ற தசை அசைவுகளை (Peristalsis) ஊக்குவிக்கிறது.
•    பித்த நீர், பெருங்குடலை தூண்டி, அதிக தண்ணீரை சுரக்க வைக்கிறது. இதனால் உணவுக் கூழை வெளியே தள்ளுகிறது, சுலபமாகிறது.
பித்த நீரின் வர்ணம், மஞ்சள், பச்சை, பழுப்பு நிறமாக மாறிவரும்.
காரணம் எந்த வகை பித்த உப்புகள் அதிகமாக இருக்கின்றதோ, அதன் படி பித்த நீரின் நிறம் இருக்கும். பொதுவாக பைலீரூபின் ஆரஞ்ச் அல்லது மஞ்சள் நிறத்தில் இருக்கும். பைலிவெர்டின் பச்சை நிறத்தில் இருக்கும்.
கல்லீரலிலிருந்து பித்த நீர், கல்லீரலின் வலது, இடது குழாய்கள் மூலம் வெளிவரும். இந்த இருகுழாய்களும் கல்லீரல் குழாயாக இணைந்து விடும். இந்த கல்லீரல் குழாய், பித்தப்பையிலிருந்து வரும் சிஸ்டிக் (Cystic) குழாயுடன் சேர்ந்து பொதுவான பித்த நீர் குழாயாகும். கோலிசிஸ்டோகினின் (Cholecystokinin) என்ற ஹார்மோனின் உதவி, உந்துதலுடன் முன்சிறுகுடலை (Duodenum) அடைகிறது. முன்சிறுகுடலில் உணவு வந்தடையும் போது இந்த Cholecystokinin ஹார்மோனை சுரக்கும். உணவு முன்சிறுகுடலை அடைந்தவுடன், பித்தப்பைக்கு செய்தி வரும். அது சுருங்கி ஒரு வால்வை (Sphincter of oddi) திறந்து, சிறுகுடலில் பித்த நீரை கொட்டும். உணவும் பித்த நீர் கலந்து, ஜீரணமாகும். மீந்த பித்த நீர் உப்புக்கள் குடல் சுவர்களால் உறிஞ்சப்பட்டு மறுபடி சுழற்சியாக திரும்ப திரும்ப உபயோகப்படும் இந்த சுழற்சி ஒரு நாளில் உடலில் 10-12 தடவை நடக்கும்.
பித்தப்பை உபயோகமானது. ஆனால் தேவையற்றது. கல்லீரலால், சிறுகுடலுக்கு பித்தப்பை இல்லாமல் நேராக பித்த நீரை குடலுக்கு அனுப்பமுடியும். சில அறுவை சிகிச்சைகளில் பித்தப்பை எடுக்கப்பட்டாலும், பாதிப்பு இல்லை.
பித்தப்பை கோளாறுகள்
கற்கள்- பித்தப்பையில் கற்கள், அதிக கொலஸ்ட்ரால், பித்த நீர் உப்புகள் (நிறம் கொடுக்கும்) மற்றும் கால்சிய உப்பு, இவற்றால் உண்டாகும். இந்த மாதிரி கற்கலிருக்கும் கோளாறை ’Cholelithiasis’ என்பார்கள். இந்த கற்கள் பித்த நீர் குழாய்களில் இருந்தால் (Choledocholithiasis)  என்பார்கள்.முன்பு சொன்ன பித்தப்பை குழாயான சிஸ்டிக் நாளத்திலும் கற்கள் ஏற்படலாம்.
பித்த நீரில் அதிக கொலஸ்ட்ரால் (கொழுப்பு) இருந்தால் அவற்றில் கரைய முடியாமல் தேங்கி படிமங்களால் (Crystals)  மாறிவிடும். இவை கூடி, கற்களாக மாறுகின்றன. பித்தப்பையிலிருக்கும் கற்கள் கூட, நகர்ந்து, பித்தநீர் குழாயில் சேர்ந்து விடும். பித்தநீர் வருவதை அடைத்து விடும். குடலுக்கு ஜீரண உதவி செய்யும் பித்த நீர் போய் சேராது.
காமாலை (Jaundice) வியாதியால் முடியும், பித்தநீர் நாளங்களின் கற்கள் இருந்தால், தொற்று நோய்கள் ஏற்படும். கற்கள் உண்டாக மற்ற காரணங்கள், மலச்சிக்கல், ஆரோக்கிய குறைவு, பரம்பரை, கோப உணர்ச்சிகள், ஸ்ட்ரெஸ் இவையாகும்.
அறிகுறிகள்
பித்தப்பை கற்களுக்கு அறிகுறிகள் பல வருடங்கள் தெரியாமலே போகலாம். பித்தநீர் குழாயை பெரிதாக அடைக்கும் போது வலி, பிரட்டல், வாந்தி ஏற்படும். இதை biliary Colic என்பார்கள்.  இந்த வலி மிகவும் அதிகமாக இருக்கும். மேல் வயிற்றில் ஏற்படும். உணவு உண்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு இந்த வலி தாக்கலாம். பித்த நீர் அடைப்பட்டால், பேக்டீரியா உருவாகி பெருகி விடும். குழாய்களில் நோய் தொற்று ஏற்படும். கல்லீரலில் கட்டிகள், பிளவைகள் உண்டாகும். ஜுரம், குளிர் சுரம், காமாலை ஏற்படலாம். தொடர்ந்து வலி, ஜுரம், தோள்பட்டை வலி இவை ஏற்படும்.
சிகிச்சை
பித்தப்பை கற்களால் எந்த அறிகுறியும் தென்படாத வரை, அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருக்கலாம். கற்களை மருந்துகளால் கரைக்க முடியும். ஆனால் 5 வருடங்களில் மறுபடியும் தோன்ற வாய்ப்புகள் உண்டு. அறுவை சிகிச்சையால் பித்தப்பையை எடுப்பது ஒரு வகையில் நல்லது எனலாம்.
Cholecystitis  என்பது பித்தப்பை சுவர்களில் ஏற்படும், ரணம், கட்டிகளை குறிக்கும் நோய். இது பித்தக் குழாய்கள் கற்களால் அடைக்கப்படுவதால் ஏற்படும் பேக்டீரியா தாக்குதலால் வரும். தீவிர வலி, ஜுரம் இருக்கும். ஓய்வு மற்றும் ஆன்டி – பையாடிக் மருந்துகள் தேவைப்படும். இந்த நோய் நாட்பட நீடித்தால், பித்தப்பை தேவைப்படும். இந்த நோய் நாட்பட நீடித்தால், பித்தப்பை சுவர்கள் தடித்து, காயமாகி சிறுத்து விடும்.
சாதாரணமாக இந்த கோலிசிஸ்டைடீஸ் (Cholecystitis)  நோய் 2,3 நாட்கள் தீவிரமாக தாக்கி, பிறகு 1 வாரத்தில் குறைந்து விடும்.
உங்களுக்கு இந்த கற்களினால் எந்த அறிகுறியும் தெரியாமல் இருந்தால், அப்படியே இருப்பது நல்லது.
வீட்டு வைத்தியம்
•    ஒரு நாளில் இரு வேளை கேரட், வெள்ளரி, பீட்ரூட் சாறுகளை கலந்து குடிக்கவும். பித்தப்பை சுத்தமாகும்.
•    பேரிக்காய் (Pears)  சாறு நல்லது.
•    சிக்கரி மலர்கள், வேர் மற்றும் விதைகளிலிருந்து எடுக்கப்பட்ட கஷாயமும் நல்லது. அளவு 30 லிருந்து 60 மி.லி.
•    வயிற்று வலி குறைய சூடு ஒத்தடம் கொடுக்கலாம்.
உணவு
•    பட்டினி இருந்தால் தொடர்ந்து அல்ல, ஒரு வேளை சிறிய பித்தப்பை கற்கள் அகற்றப்படும். பட்டினியின் பிறகு காரட், பீட்ரூட் போன்ற காய்கறி சாறு அல்லது திராட்சை, எலுமிச்சை பழ ரசங்களை அருந்தலாம்.
•    உணவில் நிறைய தயிர் சேர்த்துக் கொள்ளவும்.
•    மாமிச உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள் மசாலா, ஊறுகாய் இவற்றை தவிர்க்கவும்.
சில ஆயுர்வேத மூலிகைகள்
1.    கீழாநெல்லி (Phyllanthus Neruri) பித்த நீர் சுரப்பை அதிகரிக்கிறது. சிறுநீர் சுலபமாக பிரிய உதவும். குளிர்ச்சியை உண்டாக்கும். காமாலை நோய்களுக்கு அருமருந்து தொன்று தொற்று பயன்படுவது பசியை தூண்டும்.
2.    கருகா, கைகேசி (Eclipta Prostrata) பித்த நீர் பாதைகளின் அடைப்பை குறைக்கிறது. பித்த நீர் தடைபடாமல் பாய உதவும் மருந்து. கல்லீரலுக்கு டானிக்.
3.    நெரிஞ்சி (Tribulus Terrestris) சிறுநீரக செயல்பாடுகளை ஊக்குவிக்கிறது. சிறுநீர் பிரிய உதவும். குளிர்ச்சி செய்யும். டானிக்.
சில ஆயுர்வேத மருந்துகள்
1.    உசீரஸவ
2.    சாதாங்கக்வாத சூரணம்
3.    மஹாசூர்யவர்த்த ரச
4.    திராட்சாதி ரசாயனம்
5.    லவங்காசவ.

Click here to submit your review.


Submit your review
* Required Field





 
Home | Our Clinic | Doctor | Products | Books | Magazine | Contact Us
All Rights Reserved © Chennai AyurvedaPowered by Global iWay