Chennai Ayurvedicayurvedic treatmentAlternative MedicineChennai Ayurveda


வயிற்றுக்கோளாறுகளுக்கான மூலிகைகள்

in Digestive Disorders Tamil

1.    ஜீரணத்தை தூண்டுபவை- இவை உமிழ் நீர் சுரப்பை அதிகரிக்கும் வயிற்றில் அமிலக்குறைவு ஏற்பட்டால் இந்த மருந்துகள் பயன்படும். அதிக அமிலச் சுரந்தால் இந்த மருந்துகளை உபயோகிக்க கூடாது. நிலவேம்பு (Andrographis), மூக்கிரட்டை(Boerhaavia diffusa).
2.    வாயுவை வெளியேற்றுபவை (carminative) - இவை அஜீரணம், அதிக வாயுத்தொல்லை இவற்றை நீக்கும். சோம்பு, துளசி, ஏலக்காய், இலவங்கம், கிராம்பு, தனியா, ஓமம், லாவண்டர், மஞ்சள் போன்றவை.
3.    இதமளித்து, எரிச்சலை போக்குபவை:- நெஞ்செரிச்சல், அஜீரணம், இவற்றை போக்கும் மூலிகைகள் – சீந்தில் (குடூச்சி-Tinospora cordifolia), இஞ்சி, போன்றவை
வயிற்று பாதிப்புகளுக்கு நிவாரணமளிக்கும் இயற்கை உணவுகள்
1.    இஞ்சி - (Zingiber officinale)

•    ஜீரணத்தை தூண்டும்
•    அஜீரணம், வாய்வு தொல்லைகளை போக்கும்.
•    அநேக ஜீரண மண்டல பாதிப்புகளுக்கு நல்ல மருந்து.
•    குடலைசைவுகளை தூண்டும்
•    பிரட்டல், வாந்தி இவற்றை கண்டிக்கும்.
•    பல வித பயன்களை தரும்.
2.    அதிமதுரம் (Glycyrrhiza glabra)

•    ஜீரண மண்டல உறுப்புகளில் ‘முசின்’ (mucin) சுரந்து உட்சுவர்களை பாதுகாக்கிறது. அதிமதுரம் இந்த முசின் சுரப்பை தூண்டும். இதமானது. எரிச்சலை குறைக்கும்.
•    பாதிக்கப்பட்ட ஜீரண செல்களை குணமாக உதவும்.
•    எச்.பைலோரி கிருமியை அழிக்கும்.
•    வேர் தான் பயனாகும் பாகம்.
•    பெப்டிக் அல்சரில், அதிமதிரப்பொடி 1/2 தேக்கரண்டி எடுத்து, ஒரு கப் தண்ணீரில், இரவில் ஊறவைத்து மறுநாள் காலையில் அரிசிக் கஞ்சியும் சாப்பிடலாம்.
3.    பெருங்காயம் - (Ferula Narthex)

வயிற்றுப்பொருமல், வாய்வு இவற்றுக்கு மட்டுமன்றி பல வயிற்றுக்கோளாறுகளுக்கு, பெருங்காயம் அருமருந்து. பெருங்காயத்தால் தயாரிக்கப்படும் ஹிங்கு வாஷ்ட லேகியம். ஜீரணத்திற்கும், வயிற்றிலிருந்து வாய்வை வெளியேற்றவும் கண்கண்ட மருந்து.
4.    பெருஞ்சீரகம், சோமம் -
ஜீரணத்திற்கு உதவுகிறது. டாக்டரின் ஆலோசனையில்லாமல் இதை உபயோகிக்க வேண்டாம்
5.    இலவங்கம் (பட்டை)-
இது பேதியை கட்டுப்படுத்தும், பிரட்டல் குறையும். ஜீரண சக்தி அதிகரிக்கும்.
6.    பூண்டு- வாய் நோய்கள், மூலம் இவற்றுக்கு நல்லது.
7.    வில்வம்- பேதிக்கு வில்வப்பழம் மருந்தாகும். வயிற்றுப் புண்களுக்கு நீருபிக்கப்பட்ட மருந்து. மலச்சிக்கல் ஏற்படுத்தாமல் பேதியை குணப்படுத்தும்.
8.    பார்லி- ஜீரணத்திற்கு சிறந்தது. வாயுவை வெளியேற்றும். வயிற்றுக்கு இதமானது. எரிச்சலை போக்கும்.
9.    துளசி- பசியை தூண்டும். வயிறு, குடல்களிலிருந்து வாயுவை வெளியேற்றும்.
10.    நெருஞ்சி (Tribulus Terrestris)

11.    பசியை தூண்டும் வாயுவை வெளியேற்றும்.
12.    வல்லாரை (Centella Asiatica) - அமிலச் சுரப்பை சீராக்கும்.

13.    கடுக்காய் - கல்லீரலை காக்கும். அதன் வேலைகளை தூண்டும். பசியை தூண்டும் வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும். வாயுவை வெளியேற்றும்.
14.    கார்போகரிசி (Psoralia Corylifolia) - பசியை உண்டாக்கும். அஜீரணம், மலச்சிக்கல், மூலம், இவற்றுக்கு மருந்தாகும். வாயுவை வெளியேற்றும் வயிற்றுப்பூச்சிகளை போக்கும். கல்லீரலை ஊக்குவிக்கும்.

15.    கிராம்பு - வாயுவை ஜீரணமண்டலத்திலிருந்து வெளியேற்றுவதில்   சிறந்த மருந்து. பொடியாக அல்லது நீரில் ஊறவைத்து கொடுக்க, வாந்தி, மந்தம், வாய்வு, அஜீரணம் இவற்றுக்கு மருந்து.
16.    மிளகு – மலச்சிக்கலுக்கு சிறந்த மருந்து. வாய்வு, உப்புசம் இவற்றை போக்கும். அஜீரணத்தையும் போக்கும்
17.    இசப்கோல்- மலச்சிக்கலை போக்க உதவும் நார்ச்சத்து நிறைந்த பொருள்
18.    கற்றாழை- வயிற்றுப்புண்களையும், காயங்களையும் குணமாக்கும்
19.    வாயுவிளங்கம்- வயிற்று பெருக்கம், வலியை போக்குகிறது.
20.    ஏலக்காய்- வயிற்றில் தோன்றும், ஜீரணசாறுகளின் சுரப்பை, அதிகரிக்கும்.
21.    ஜாதிக்காய்- வலியை குறைக்கும்.
22.    நெல்லி- குளிர்ச்சி, மிருதுவான மலமிளக்கி, சிறுநீர் பெருக்கி, சோகை அஜீரணம் இவற்றை போக்கும், பசியை தூண்டும்.
23.    கொத்தமல்லி- டானிக், பசியை தூண்டும், உடல்வாயுவை போக்கும், சிறுநீர் பெருக்கி, ஆண்மை பெருக்கி.
24.    கதலி- டானிக், வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும், எரிச்சலை தணிக்கும், நீரிழிவு வியாதிக்கு ஏனைய மருந்துகளுடன் பயனளிக்கும், வயிற்றுக் கோளாறு, காலரா இவற்றுக்கு நல்லது.
25.    கிழாநெல்லி- காமாலை, கல்லீரல் நோய்களுக்கு கண்கண்ட மருந்து. சிறுநீர் தொற்றுகளை போக்கும். பசியைதூண்டும். கல்லீரலுக்கு சிறந்த டானிக்.
26.    கருகா- கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், மண்ணீரல் வீக்கம் இவற்றுக்கு நல்ல மருந்து.
27.    நிலவேம்பு:- டானிக், ஜுரத்தை குறைக்கும், வயிற்றுப் பூச்சிகளை அகற்றும் அஜீரணம், பேதி, பலவீனம் இவற்றை குறைக்கும். பசியை தூண்டும்.
28.    காசினி- பேதி, ஜுரம், வாந்தி இவை போக்க உதவும். பசியை தூண்டி, அஜீரணத்தை போக்கும்.
29.    மணத்தக்காளி- கல்லீரல் வீக்கம், மூலம், ஜுரம், மலச்சிக்கல் இவற்றுக்கு மருந்தாகும். சிறுநீர் சுலபமாக போக உதவும்.
30.    புதீனா- வாயுவை வெளியேற்றும் அஜீரணத்திற்கு இயற்கையான மருந்து. வயிற்று சுவர்களுக்கு இதமளிக்கும்.

Click here to submit your review.


Submit your review
* Required Field





 
Home | Our Clinic | Doctor | Products | Books | Magazine | Contact Us
All Rights Reserved © Chennai AyurvedaPowered by Global iWay